மயிலிறகு வைத்த புத்தகம்
A Book with a Peacock Feather
Subbu ·
மண்ணில் இட்லி சுட்டு பழகுகோழி குஞ்சுகளை வளர்த்து பார்கோழிகளை துரத்தி விளையாடுநாய் குட்டியுடன் சண்டை போடுஆட்டு குட்டிகளை அனைத்துக்கொள்கலர் மீன்கள் குவளையில் வாங்குஓட்டு மழைநீரை கையில் பிடித்து பார்பொட்டிகள் கட்டி தாயம் சுழற்றுஅஞ்சாங்கல் பொறுக்கி எடுமயிலிறகை புத்தகத்தில் மறைத்துவைமேலே பார் நிலவு பின்தொடரும்விண்மீன்கள் மறைந்து மிளிரும்கிணற்றில் நீச்சல் பழகுநொங்குவண்டி செய்து ஓட்டுபனையிலையில் காற்றாடி செய்தென்னை ஓலை கடிகாரம் கட்டி பார்அம்மாவுடன் கோயிலுக்கு செல்தூரிகள் ஆடி சோர்ந்து போபட்டாம்பூச்சி பிடித்து பழகுபாட்டியிடம் கதை கேள்தாத்தாவுடன் வயலுக்கு செல்பொம்மைகள் வாங்கி உடைவிண்மீன்களை கணக்கு எடுகாகிதத்தில் பட்டம் விடுஒரு குருவிகூடாவது வீட்டில் வைஓடியாடி விளையாடுஓய்ந்து போய்கூட செல்பேசியை தொட்டுவிடாதேகுழந்தை பருவம் ஒரு வரம் !
Learn to cook idlis out of mudTry raising a brood of chicksPlay at chasing the hensWrestle with a puppyHug the baby goatsBring home coloured fish in a tumblerCatch the rain off the roof tiles in your palmChalk the squares and roll the dice for thaayamGather up pebbles for five-stonesHide a peacock feather inside a bookLook up — the moon will follow youthe stars will hide, and shineLearn to swim in the wellMake a nungu cart and run it alongMake a pinwheel from a palm leafTie on a watch woven from a coconut frondGo to the temple with AmmaRide the swings till you are worn outLearn to catch butterfliesAsk Paati for a storyGo to the fields with ThaathaBuy toys, and break themCount the starsFly a paper kiteKeep at least one sparrow’s nest at homeRun about and playEven when you are worn out, don’t touch the phoneChildhood is a gift!