இமைப் படம்
A picture when the eyes close
Subbu ·
உன்னோடு நான் அமர்ந்துகண்ணோடு கண் கலந்துஇமைக்காமல் கதை பேசவேஅசைந்தாடும் மயில் போலவேஅழகாக தலை ஆடவேஅமையாது இது போலவே
மண்ணோடு மழை சேர்ந்துகுளிரோடு மணம் சேர்ந்துகொண்டாலே ஆனந்தமேஉன்னோடு நான் சேர்ந்துகையோடு கை கோர்த்துரசித்தாலே அது போதுமே
இரவோடு கடல் சேர்ந்துநிலவோடு ஒளி சேர்ந்துகரையோடு அலை செருமேதோளோடு நீ சாய்ந்துசிரிப்போடு கதை பேசிகிடந்தாலே பேரின்பமே
மலரோடு நூல் சேர்ந்துமுறையாக அதை கோர்த்துமுடிவாக எனை செருமேமுடியோடு அது சேர்க்கவேஇதழோடு நகை கூடுமேஇன்பம் மனதோடு இசைபாடுமே
மரமோடு நிழல் சேர்ந்துகிளையோடு அனில் ஏரிஇணையோடு விளையாடுமேஇமைமூட படமாகுமேநெஞ்சோடு தலை சாயவேஎன்னோடு சுகம் கூடுமே
வரப்போடு ஒரு பார்வைஎன்னோடு மறு பார்வைவைத்தேதான் நடை போடவேமுள்ளொன்று கால் ஏறவேகையோடு நீ சேரவேஅள்ளிக்கொண்டேனே என் பாவையே
உனைப்போல பெண் மூன்றுஎன்னைப்போல ஆண் என்றுதூக்கத்தில் நீ பேசவேபக்கத்தில் நான் கேட்கவேவெட்கத்தில் முகம் மூடுமேசொர்கமே இதை எங்குமே
விரலோடு மருதாணிவிதமாக நான் வைக்கபசியென்று நீ கூறவேபருப்போடு நான் ஊட்டவேருசித்தே நீ தலை ஆட்டவேரசித்தே நான் சிலையாகிறேன்
நட்போடு பலர் பேசதவித்தே நான் பார்க்கஅதையே அவள் நோக்கவேஎப்போதும் நீ என்றுஅப்போது அவள் பார்வைதப்பாது எனை கொஞ்சுமே
குயிலோடு காலை விடியதுயிலோடு நீயும் பிரியபாலோடு தூள் செருமேசுடோடு மணம் ஏறுமேசிரிப்போடு அதை வாங்கவேசிறப்பான தினம் ஆகுமே
மாதத்தோடு நீ தூரமேரணத்தோடு நாள் போகுமேமடியோடு உனை சாய்க்கவேதலையோடு விரல் கோதுமேஇதமோடு சில நேரமேவைப்பேனே உனை நானுமே
அன்போடு சில நேரம்ஆசையோடு பல நேரம்கொண்டாடி நான் தீர்க்கவேதிண்டாடி தான் போகிறேன்என்னாலும் இது போலவேகிடைத்தாலே அது போதுமே
கனவோடு பாதி இங்கேநினைவோடு மீதி அங்கேநிஜமாக இது நேருமோநிழலோடு தான் போகுமோஎதுவாக இருந்தாலுமேஅவளோடு அன்பாகுமே !
Sitting here beside you,eyes meeting eyes,talking without a blink,like a swaying peacockyour head nodding, lovely —nothing else will be like this.
Rain meeting the earth,the scent rising with the cold —that alone is joy.You and I together,hand laced in hand,just taking it in is enough.
The sea with the night,the light with the moon,the wave reaching the shore;you leaning on my shoulder,talking, laughing —just lying there is bliss.
Flowers and thread,strung together just so,come to me at last;to set them in your hair —a smile gathers on your lips,and joy sings in the heart.
Shade beneath the tree,a squirrel up the branchplays with its mate;when I close my eyes it becomes a picture —your head resting on my chest,and comfort grows in me.
One glance on the field’s edge,the other glance on me,as you walk along;a thorn gets into your foot,you reach for my hand,and I gathered you up, my girl.
“Three girls like you,and a boy like me,” —you say it in your sleep,I hear it beside you,and you hide your face, shy.This is heaven, wherever we are.
Henna on your fingersI put on in patterns;you say you are hungry,I feed you rice and dal,you taste it and nod,and watching you, I turn to stone.
Many talk to her as friends;I watch, restless;she sees that,and “always, it’s you” —then her looknever fails to caress me.
Morning breaks with the koel,you part from sleep;the coffee powder meets the milk,the aroma rises with the heat;you take it, smiling,and the day turns out fine.
When your month comes round,and the days go by in pain,I lay you in my lap,my fingers comb your hair,and for a while, gently,I will hold you.
Some moments with love,many with longing —trying to celebrate them all,I am at a loss.Any day, just like this —if it is given, that is enough.
Half of it here, with the dream,the rest there, with the memory.Will it ever come true,or go the way of the shadow?Whichever it is,it is love, with her!