அன்பழைப்பு
An invitation, with love.
Subbu ·
வாழையோடு தோரணங்கள்வாசலிலேதான் அழைக்கபழங்களோடு சந்தனம்பன்னீரோடு தான் மணக்க
முகத்தோடு புன்னகைகள்முழுவதுமாய் சிவக்கவந்தவர்கள் கை பிடித்துநலம் விசாரித்துச் சிரிக்க
தொடங்கியது வாத்தியங்கள்விரைந்தே தான் நடக்கமாப்பிள்ளையை வர வைக்கஎன்று பலரும் சிரிக்க
தாத்தா பாட்டியர் – மேடைபக்கத்திலே அமர்ந்து ரசிக்க,அப்பா அம்மாவும் – சோர்வின்றிபக்குவமாய் நின்று உபசரிக்க
தாய்மாமன்கள் அத்தைகள்தாலாட்டிய நினைவழைக்கபெரியப்பா பெரியம்மாக்கள்பெற்றாராய் அன்பு தெளிக்க
சித்தப்பா சித்திகள்சிந்தித்தபடி நிற்கஅத்தான் அக்காக்கள்ஆனந்தமாய் பார்க்க
அண்ணன் அண்ணிகள்அக்கரையோடு விசாரிக்கதம்பி தங்கைகள்தடபுடலென வேலைசெய்ய
மச்சான்கள் மனம் நிறைக்கஆசான்கள் அறம் வளர்க்கபந்தங்கள் சொந்தங்கள்நண்பர்கள் பேசி கதைக்க
கல்யாணப் பந்தலிலேகலையேரும் நாள்வரவே,இருவீட்டார் அன்பழைப்பு –வருகை தந்து வாழ்த்திடவே !
Plantain trees and festoonswelcome you at the door;fruit and sandalwood,fragrant with rosewater;
smiles on every face,cheeks glowing with them;taking each guest by the hand,asking after them, laughing;
the music has begun,everything moves quickly;“Bring the groom out!”many say, laughing;
grandfathers and grandmothers —seated near the stage, enjoying it all;fathers and mothers — never tiring —standing with grace, tending to the guests;
mothers’ brothers and fathers’ sisterscalling up the lullabies they sang;fathers’ elder brothers and their wivesshowering love like parents;
fathers’ younger brothers and their wivesstanding deep in thought;brothers-in-law and elder sisterslooking on with joy;
elder brothers and their wivesasking after everyone with care;younger brothers and sistersbustling about the work;
cousins filling every heart,teachers nurturing what is right,relations and kinand friends, talking and telling stories;
under the wedding canopy,as the day of splendour arrives,both families invite you, with love —come, and give your blessings!