An invitation, with love.
Subbu ·
அன்பழைப்பு
வாழையோடு தோரணங்கள்
வாசலிலேதான் அழைக்க
பழங்களோடு சந்தனம்
பன்னீரோடு தான் மணக்க
முகத்தோடு புன்னகைகள்
முழுவதுமாய் சிவக்க
வந்தவர்கள் கை பிடித்து
நலம் விசாரித்துச் சிரிக்க
தொடங்கியது வாத்தியங்கள்
விரைந்தே தான் நடக்க
மாப்பிள்ளையை வர வைக்க
என்று பலரும் சிரிக்க
தாத்தா பாட்டியர் – மேடை
பக்கத்திலே அமர்ந்து ரசிக்க,
அப்பா அம்மாவும் – சோர்வின்றி
பக்குவமாய் நின்று உபசரிக்க
தாய்மாமன்கள் அத்தைகள்
தாலாட்டிய நினைவழைக்க
பெரியப்பா பெரியம்மாக்கள்
பெற்றாராய் அன்பு தெளிக்க
சித்தப்பா சித்திகள்
சிந்தித்தபடி நிற்க
அத்தான் அக்காக்கள்
ஆனந்தமாய் பார்க்க
அண்ணன் அண்ணிகள்
அக்கரையோடு விசாரிக்க
தம்பி தங்கைகள்
தடபுடலென வேலைசெய்ய
மச்சான்கள் மனம் நிறைக்க
ஆசான்கள் அறம் வளர்க்க
பந்தங்கள் சொந்தங்கள்
நண்பர்கள் பேசி கதைக்க
கல்யாணப் பந்தலிலே
கலையேரும் நாள்வரவே,
இருவீட்டார் அன்பழைப்பு –
வருகை தந்து வாழ்த்திடவே !
I never thought I would write a verse like this. I surprised myself when I wrote it. I hesitated at first, because my friend wanted it for his wedding invitation. One wrong word in print could make an auspicious thing inauspicious. That is not a small mistake. I also doubted it was any good. With his encouragement, I finished it. Both of them liked it, and their families gave warm feedback. This is my first published verse. It is special in many ways.