A picture when the eyes close
Subbu ·
இமைப் படம்
உன்னோடு நான் அமர்ந்து
கண்ணோடு கண் கலந்து
இமைக்காமல் கதை பேசவே
அசைந்தாடும் மயில் போலவே
அழகாக தலை ஆடவே
அமையாது இது போலவே
மண்ணோடு மழை சேர்ந்து
குளிரோடு மணம் சேர்ந்து
கொண்டாலே ஆனந்தமே
உன்னோடு நான் சேர்ந்து
கையோடு கை கோர்த்து
ரசித்தாலே அது போதுமே
இரவோடு கடல் சேர்ந்து
நிலவோடு ஒளி சேர்ந்து
கரையோடு அலை செருமே
தோளோடு நீ சாய்ந்து
சிரிப்போடு கதை பேசி
கிடந்தாலே பேரின்பமே
மலரோடு நூல் சேர்ந்து
முறையாக அதை கோர்த்து
முடிவாக எனை செருமே
முடியோடு அது சேர்க்கவே
இதழோடு நகை கூடுமே
இன்பம் மனதோடு இசைபாடுமே
மரமோடு நிழல் சேர்ந்து
கிளையோடு அனில் ஏரி
இணையோடு விளையாடுமே
இமைமூட படமாகுமே
நெஞ்சோடு தலை சாயவே
என்னோடு சுகம் கூடுமே
வரப்போடு ஒரு பார்வை
என்னோடு மறு பார்வை
வைத்தேதான் நடை போடவே
முள்ளொன்று கால் ஏறவே
கையோடு நீ சேரவே
அள்ளிக்கொண்டேனே என் பாவையே
உனைப்போல பெண் மூன்று
என்னைப்போல ஆண் என்று
தூக்கத்தில் நீ பேசவே
பக்கத்தில் நான் கேட்கவே
வெட்கத்தில் முகம் மூடுமே
சொர்கமே இதை எங்குமே
விரலோடு மருதாணி
விதமாக நான் வைக்க
பசியென்று நீ கூறவே
பருப்போடு நான் ஊட்டவே
ருசித்தே நீ தலை ஆட்டவே
ரசித்தே நான் சிலையாகிறேன்
நட்போடு பலர் பேச
தவித்தே நான் பார்க்க
அதையே அவள் நோக்கவே
எப்போதும் நீ என்று
அப்போது அவள் பார்வை
தப்பாது எனை கொஞ்சுமே
குயிலோடு காலை விடிய
துயிலோடு நீயும் பிரிய
பாலோடு தூள் செருமே
சுடோடு மணம் ஏறுமே
சிரிப்போடு அதை வாங்கவே
சிறப்பான தினம் ஆகுமே
மாதத்தோடு நீ தூரமே
ரணத்தோடு நாள் போகுமே
மடியோடு உனை சாய்க்கவே
தலையோடு விரல் கோதுமே
இதமோடு சில நேரமே
வைப்பேனே உனை நானுமே
அன்போடு சில நேரம்
ஆசையோடு பல நேரம்
கொண்டாடி நான் தீர்க்கவே
திண்டாடி தான் போகிறேன்
என்னாலும் இது போலவே
கிடைத்தாலே அது போதுமே
கனவோடு பாதி இங்கே
நினைவோடு மீதி அங்கே
நிஜமாக இது நேருமோ
நிழலோடு தான் போகுமோ
எதுவாக இருந்தாலுமே
அவளோடு அன்பாகுமே !
I usually color my verse with embellishments. For her, I used only black and white. Anything more would have been mine, not hers.
She read it and said, "Paahh.. almost unga lifestyle..ipdi tha irukanum nu thoughts motha vaazhkaiyum kondu vanthutinga. What else do I need more this , antha maari"
The verse was acknowledged. The desire was not.
So it stayed a picture when the eyes close. I opened them and looked. It was not there.