A Book with a Peacock Feather

Subbu ·

மயிலிறகு வைத்த புத்தகம்

மண்ணில் இட்லி சுட்டு பழகு
கோழி குஞ்சுகளை வளர்த்து பார்
கோழிகளை துரத்தி விளையாடு
நாய் குட்டியுடன் சண்டை போடு
ஆட்டு குட்டிகளை அனைத்துக்கொள்
கலர் மீன்கள் குவளையில் வாங்கு
ஓட்டு மழைநீரை கையில் பிடித்து பார்
பொட்டிகள் கட்டி தாயம் சுழற்று
அஞ்சாங்கல் பொறுக்கி எடு
மயிலிறகை புத்தகத்தில் மறைத்துவை
மேலே பார் நிலவு பின்தொடரும்
விண்மீன்கள் மறைந்து மிளிரும்
கிணற்றில் நீச்சல் பழகு
நொங்குவண்டி செய்து ஓட்டு
பனையிலையில் காற்றாடி செய்
தென்னை ஓலை கடிகாரம் கட்டி பார்
அம்மாவுடன் கோயிலுக்கு செல்
தூரிகள் ஆடி சோர்ந்து போ
பட்டாம்பூச்சி பிடித்து பழகு
பாட்டியிடம் கதை கேள்
தாத்தாவுடன் வயலுக்கு செல்
பொம்மைகள் வாங்கி உடை
விண்மீன்களை கணக்கு எடு
காகிதத்தில் பட்டம் விடு
ஒரு குருவிகூடாவது வீட்டில் வை
ஓடியாடி விளையாடு
ஓய்ந்து போய்கூட செல்பேசியை தொட்டுவிடாதே
குழந்தை பருவம் ஒரு வரம் !


I wrote this for my Kavinmalar as her summer holidays were approaching. I wanted her to have every part of my childhood and its joys. She can still have them, And I would rather she reached for these than for a phone. So I went back to my own childhood and picked out the memories one by one — the ones that truly made it joyful. It felt less like reminding her and more like reminding myself. I want her to feel the joy I once had, and to see for herself what it is like.