The Dream-Maiden
Subbu ·
கனவுக்கன்னி
வண்ணமயில் கூட்டம் வந்து விளையாடும்
இன்பமழைச் சாரல் கன்னியவள் கூந்தல்
கம்பன் கண்ணதாசன் கண்டு கவிபாடும்
தங்கரதச் சோலை அள்ளியவள் மேனி
மாண்புதமிழ் சொற்கள் நின்று இசைபாடும்
தென்மதுரைச் சங்கம் செல்வியவள் பேச்சு
நீலநிறச் சாலையில் மெல்ல நடை போடும்
வெள்ளிநிலாச் சாந்து பொன்னியவள் விழிகள்
தேன் பொங்கும் அழகை தேவையின் நிழலை
நான் செய்த பாவம் கண்டு கொண்டேன்
ஊன் நின்ற உயிர் மான் பக்கம் திரும்ப
நான் என்ற சொல்லை மறந்து நின்றேன்
நீர் மறைத்த குமிழி மேல் வந்ததென்ன
அவளும் அதுபோல மறைந்து விட்டால்
கண் திறந்த இமைகள் கவலை கொண்டதென்ன
கனவோடு அவளும் கலைந்து விட்டாள்!
This is about a dream I had about a girl, back in my college days. It was so lucid that I still remembered the dream when I woke up. I was disappointed that it was only a dream. I kept thinking about her, so I thought I would pen this down, so I can relive it whenever I want.