எப்படிப் பிறந்தது
How Was It Born
Subbu ·
தாமரை எப்படிப் பிறந்ததுஅலையாத நீரில் நனையாமல்அழகாக அமர்ந்து அசையாமல்அதிகாலைப் பொழுதில் இவள் முகம்பதிவாகிப் பலனாகக் கிடைத்தது
பாடல் எப்படிப் பிறந்ததுஅடைக்காத மூங்கில் சேலையைஉடையாத கணுவால் சலவை செய்துஇலவமாக இவள் குரல் அணிந்ததுஇதழோடு இசையும் கலந்தது
வெண்மை எப்படிப் பிறந்ததுமேகங்கள் சேர்ந்து நின்றதுமீன்களும் மோதிக் கொண்டதுஇவள் பிம்பம் நிலவும் பார்த்ததுஒளிவழியே தரையிறங்கி விழுந்தது
வியப்பு எப்படிப் பிறந்ததுஉயிராக மெய்யாக இருந்ததுஉறவுபோல இரண்டும் இணைந்ததுஇவளுக்குப் பெயரொன்றைத் தரவேதமிழ்பிறந்து தனைமறந்து நின்றது
How was the lotus born?On water without a ripple, never wet,seated in beauty, without a stir —at the first light of dawn her faceleft its imprint, and that was its yield.
How was song born?The open bamboo’s saree,washed clean by its unbroken node,wore her voice, soft as silk-cotton,and music blended with her lips.
How was whiteness born?The clouds gathered and stood still,the stars jostled one another,the moon, too, saw her reflection,and fell to the ground along its light.
How was wonder born?It lived as vowel, as consonant —like kin, the two were joined;to give her a name,Tamil was born, and stood, forgetting itself.